எல்லோருக்குமான ரகசியங்களில் ஒன்றாகவே இருக்கிறது தனது பெயரோடு தான் நேசிப்பவரின் பெயரை முன் பின் சேர்த்துக் கொள்வதும் அதனூடான குறியீடுகளை கடவுச் சொல்லாக வைத்திருப்பதும்..
உனதழைப்பிற்காக காத்திருந்த பொழுதுகளில் இரவு துணையிருந்தது.. நீயழைத்தவுடன் அணைத்துக் கொள்ள இரவு தன் கண்களை மூடியிருந்தது.. மெல்ல என் கண்கள் மூடுகையில் சன்னல் கம்பிகளின் வழியே வெளிச்சப்புள்ளிகள் தூரத்தில் வருவது தெரிந்தது..